×

காணும் பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் 1.15 லட்சம் பேர் பயணம்: மெரினாவுக்கு கூடுதல் வாகனங்கள் இயக்கம்

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு டி.எம்.எஸ் மற்றும் அரசினர் தோட்டம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து நேற்று மெரினாவுக்கு கூடுதல் வாகனங்கள் இயக்கப்பட்டன. ஒரேநாளில் 1.15 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். சென்ட்ரல், எழும்பூர், அரசினர் தோட்டம் உள்ளிட்ட நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை ஒலிபரப்புகள் செய்யப்பட்டது. ஊழியர்கள் மைக்குகளில் பயணிகளின் உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தினர். இதேபோல், பயணிகளின் வசதிக்காக டி.எம்.எஸ் மற்றும் அரசினர் தோட்டம் ஆகிய 2 நிலையங்களில் இருந்து கூடுதல் வாகனங்கள் இயக்கப்பட்டன. மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினா கடற்கரைக்கு வந்து செல்ல வசதியாக காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையில் 8க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டன.

வழக்கமாக நிலையங்களுக்கு 2 வாகனங்கள் மட்டுமே இயக்கப்படும். ஆனால், பொதுமக்களின் வசதிக்காக நிலையங்களில் இருந்து 8க்கும் மேற்பட்ட இணைப்பு வாகனங்கள் நேற்று இயக்கப்பட்டன. குறிப்பாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் மாலை 4 மணிக்கு மேல் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், 10 நிமிடங்களுக்கு ஒரு வாகனம் என இயக்கப்பட்டது. நேற்று பொதுவிடுமுறை தினம் என்பதால் பயணிகள் அனைவருக்கும் 50 சதவீத கட்டண சலுகையும் அளிக்கப்பட்டது. இதனால், அனைத்து தரப்பினரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தினர். அதன்படி, நேற்று சுமார் 1.15 லட்சம் பேர் மெட்ரோ ரயில் சேவையையும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாகன சேவையையும் பயன்படுத்தி இருப்பதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : passengers ,train ,Metro ,Pongal , Pongal, metro train, 1.15 lakh people, travel, marina, vehicles, movement
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...