×

சிபிஎஸ்இ தேர்வுக்கு ஹால்டிக்கெட்: 2 நாளில் வெளியிட வாய்ப்பு

சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு கட்டமாக நடக்க இருக்கிறது. தொழில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் தனியாகவும், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் தனியாகவும் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்வு அட்டவணை முன்னமே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் இரண்டு நாட்களில் வெளியிட சிபிஎஸ்இ நடவடிக்கை எடுத்து வருகிறது. சிபிஎஸ்இ இணைய தளமான cbse.nic.in மூலம் ஹால்டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன. பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் மூலம் ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

அந்தந்த பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகத்தினர் ஹால்டிக்கெட் வழங்கும் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது தவிர தனித் தேர்வர்களாக பதிவு செய்துள்ள மாணவர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை சிபிஎஸ்இ இணைய தளத்தில் இருந்து தாங்களே நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் திருப்பத் தேர்வுகளை பள்ளிகள் நடத்தி வருகின்றன. அது தொடர்பாக சிபிஎஸ்இ இணைய தளத்திலும் பாட வாரியாக முக்கிய பகுதிகளில் தேர்வுக்கான குறிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.


Tags : CBSE, Examination, Haltiket, 2 Day, Opportunity
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...