×

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் : களைகட்டியது சுற்றுலா தலங்கள்

ஊட்டி,  : பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் ஊட்டியில் சுற்றுலா  பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் அனைத்து சுற்றுலா தலங்களும்  களைகட்டியுள்ளது. பொங்கல்  பண்டிகையையொட்டி தமிழகத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் தொடர்  விடுமுறை அளிக்கப்பட்டதால் சுற்றுலா  பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டுள்ளனர்.  அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில்  சுற்றுலா பயணிகள்  கூட்டம் நேற்று அலை மோதியது.

தற்போது பனி பொழிவால்  குளிர் சற்று அதிகரித்துள்ளது. இதனால், மாலை நேரங்களில் கடை விதிகளில்  நடைபயணம் மேற்கொள்ளும் சுற்றுலா  பயணிகள் ஸ்வெட்டர், சால்வை, தொப்பிகள்  வாங்க கடைகளில் குவிகின்றனர். மேலும், வெம்மை ஆடை வியாபாரம் சூடு  பிடித்துள்ளது. மேலும்  பகல் நேரங்களில் வெளியில் அதிகமாக காணப்பட்டதால், அனைத்து  சுற்றுலா தலங்களிலும் அதிகளவு காணப்பட்டனர். சுற்றுலா பயணிகள் கூட்ட   நெரிசலை சமாளிக்க ஊட்டியிலிருந்து கோவை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு  சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் ஊட்டி  தாவரவியல் பூங்காவிற்கு 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.  நேற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா  பயணிகள் வந்திருந்தனர். அங்கு சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு பொங்கல் விழா மற்றும்  விளையாட்டு போட்டிகளில் சுற்றுலா  பயணிகள் பலர் கலந்துக் கொண்டனர்.  நேற்று  முன்தினம் பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், நேற்று முதல் ஊட்டிக்கு  ஏராளமான சுற்றுலா  பயணிகள் வரத்துவங்கினர். பொங்கல் விடுமுறை மற்றும் வார  விடுமுறை என தொடர் விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள்  எண்ணிக்கை  பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், ஊட்டி நகரில் உள்ள அனைத்து  லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிவது  மட்டுமின்றி, சுற்றுலா  தலங்களுக்கு செல்லும் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.Tags : Tourist places ,Pongal Ooty ,Pongal Festival Series Tourist Places , Pongal Festival, Tourists, Ooty
× RELATED மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 6...