×

ராஜபாளையம் அருகே குடிநீர் கிணற்றில் விஷம் கலப்பு? தவளைகள் செத்து மிதந்ததால் பரபரப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே குடிநீர் கிணற்றில் தவளைகள் செத்து மிதந்ததால் விஷம் கலக்கப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு  ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ளது சுந்தரராஜபுரம். இங்குள்ள மக்களுக்கு ஆண்டான் துரை கொண்டான் கண்மாய் அருகே  உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேகரித்து சப்ளை செய்யப்படுகிறது. இந்த கிணற்றில் நேற்று திடீரென  தவளைகள் செத்து மிதந்தன. கிணற்றில் விஷம் கலந்திருக்கலாம் என தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேத்தூர் ஊரக காவல் நிலைய  எஸ்ஐ செல்வம் மற்றும் ஊராட்சி செயலர் மணிகண்டன், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

இறந்து கிடந்த தவளைகளையும், கிணற்று நீரையும் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர். பின்னர் உடனடியாக தண்ணீர் முழுவதையும் மோட்டார்  மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.இதனிடையே ஊராட்சி மன்ற தேர்தலில் தோற்றவர்கள், பழி வாங்க கிணற்றில் விஷம் கலந்ததாக,  இறந்து கிடந்த தவளைகளின் புகைப்படத்துடன் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. எனவே தவளைகள் இயற்கையான முறையில்  இறந்ததா அல்லது தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதா என்ற கோணத்தில் சேத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Tags : Rajapalayam , Rajapalayam, frogs, poison mix, wells
× RELATED ராஜபாளையத்தில் மருந்து வாங்க சென்றவர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு..!!