×

மாட்டு பொங்கல் விழாவையொட்டிபொத்திமலைக்கு பொங்கல் கூடை எடுத்து செல்லும் பெண்கள்

பொன்னமராவதி,: பொன்னமராவதி பகுதியில் மாட்டுப்பொங்கல் விழா பல இடங்களில் கோலாகலமாக நடந்தது. பொத்திமலைக்கு பொங்கல் கூடை  எடுத்து பெண்கள் சென்றனர். பொன்னமராவதியில் உள்ள வலையபட்டியில் உள்ள அடைக்கலம்காத்தார் கோயில் வீடுகளில் பொங்கல் கூடை மற்றும்  காளைகள் வழிபாடு செய்தனர். அங்கிருந்து பெண்கள் பொங்கல் கூடைகள் சுமந்தும், ஆண்கள், காளைகளை பிடித்தும் கால்நடையாக  மைலாப்பூர்-அஞ்சுபுளிப்பட்டி பொத்திமலைபட்டவன் சுவாமி கோயில் திடலில் பொங்கல் வைத்து, காளைகள் மற்றும் மாடுகளை அலங்கரித்து  விரட்டியும் வழிபாடு செய்தனர்.

இதில் மண்வெட்டி, அரிவாள் போன்ற விவசாயிகளுக்கு தேவையான பொருட்களையும் வைத்து வழிபட்டனர். குழந்தைகளுக்கு கரும்பு தொட்டில்கட்டி  கோயிலை சுற்றி வழிபட்டனர். இதே போல அடைக்கலம்காத்தார் கோயில், அழகியநாச்சியம்மன் கோயில் அருகில் சாத்தக்கருப்பர் கோயில்,  அடைக்கலம் காத்தார் கோயில் தெற்கு பகுதியில் உள்ள பெரியநாச்சி கோயில், வையாபுரியில் கைலாசபதி கோயில், ஆகிய இடங்களுக்கு பொங்கல்  கூடைகள் எடுத்து சென்று அங்கு பொங்கலிட்டு அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்கு கரும்பு, சர்க்கரை பொங்கல் வழங்கி மாட்டு பொங்கல் விழாவை  கொண்டாடினர். இதே போல வார்பட்டு, கல்லம்பட்டி, தூத்தூர், ரெட்டியபட்டி, கேசராபட்டி, காவனூர், உலகம்பட்டி, கோவனூர் உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் மாட்டு பொங்கல் விழா நடந்தது.

Tags : Women ,Pongal ,Pongal Festival The Pongal Festival for Women , Ponnamaravathi, Mattuppongal, Pothimalai, Pongal basket
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா