×

தனியார் மயமாகும் 150 ரயில்கள் 28,000 ஊழியர்கள் வேலையிழப்பு : திட்டத்தை கைவிட டிஆர்இயூ வலியுறுத்தல்

ரயில்களை தனியார் மயமாக்குவதால் 28 ஆயிரம் ஊழியர்கள் உடனடியாக வேலையை இழக்கும் அபாயம் உள்ளதால் சமூகம் மற்றும் ஊழியர்கள்  நலன் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண் டுமென டிஆர்இயூ தொழிற் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
150 ரயில்களை தனியாரிடம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. தனியார்  ரயில்களுக்கான ஏல நடைமுறை துவங்க ஏதுவாக வரைவு திட்டத்தை நிதி அயோக் கடந்த ஜனவரி 7ம் தேதி வெளியிட்டு இருக்கிறது.

தனியார் ரயில்கள் இயக்க முன் வரும் நிறுவனம் வரைவு திட்டத்தில், ஏதேனும் சரத்துகள் சேர்க்கவோ, திருத்தம் கோரவோ, அல்ல நீக்கவே  விரும்பினால் 15 தினங்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என கோரி இருக்கிறது. தனியார் ரயில்கள் தாமதமாக வந்தால் கட்டணம் திருப்பி தரும். நல்ல  திட்டம் என் றும் கட்டணம் கூடுதல் என்றும் பல்வேறு விதமாக கருத்துக்கள் நிலவுகிறது. இருப்பினும் 150 ரயில்களை தனியார் மயமாக்குவதால் 28  ஆயிரம் ஊழியர் கள் உடனே வேலையை இழக்கும் அபாயம் உள்ளதால் சமூகம் மற்றும் ஊழியர்கள் நலன் பாதிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு  உடனடியாக கைவிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில், தனியாருக்கு விடப்படும்  ரயில் புறுப்படும் நேரத்திற்கு 30 நிமிடம் முன்னதாகவோ அல்லது 30 நிமிடம் பின்னதாகவோ வேறு எந்த ரயிலும் அந்த மார்க்கத்தில் அடுத்த மூன்று  ஆண்டுகளுக்கு இயக்கப்பட மாட்டாது. தனியார் ரயில் இயக்க 35 ஆண்டுகளுக்கு அனுமதி தரப்படுகிறது.ரயில்களை சொந்த செலவில் வாங்கி,  பராமரித்து இயக்க வேண்டும். 40 ஆயிரம் கி.மீ க்கு ஒரு முறை பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். ஸ்பேர் டிரெயின் வைத்துக் கொள்ள வேண்டும்.  உரிமையாளர் மாற்றமுன் அனுமதி பெற வேண்டும். பணியில் நியமிக்கப்படுபவர்கள் முறையாக பயிற்சி பெற்று இருக்க வேண்டும். சமூக நீதி  அமைச்சக வழிகாட்டுதல் படி ஊனமுற்றவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ரயில்கள் பயணிக்க தடையில்லா சூழலை தர வேண்டும்.

ரயில்களுக்கு பயணச்சீட்டு வழங்க சம்மந்தப்பட்ட ரயில் நிலையங்களில் தனி கவுண்டர்கள் அமைத்து கொள்ளலாம். அல்லது ஐந்துக்கு ஐந்து சதுர  அடி அளவில் பூத் அமைத்து கொள்ளலாம். தனி வளைதளம் உருவாக்கி பயணச்சீட்டு வழங்கலாம். சாலை, விமான போக்குவரத்திற்கு பயண் படுத்தப்  படும் பொதுவான ஆன்ட்ராய்டு செயலி மூலமும் வழங்கலாம். நடப்பு ரயில் வே சலுகைகள், திட்டங்கள் தனியார் ரயில்களுக்கு பொருந்தாது.  பயணிகள் மற்றும் அவர்களிடம் வசூலிக்கும் கட்டண விவரங்களை அரசுக்கு தர வேண்டும். பெட்டிகளில் விளம்பரங்கள் செய்து கொள்ள  அனுமதியுண்டு. ஆனால் தோற்றம் அழகாக இருக்க வேண்டும்.

ரயிலை 15 நிமிடத்திற்கு மேல் தாமதமாக கிளப்புவது, தாமதமாக கொண்டு சேர்ப்பது, நடுவழியில் 15 நிமிடத்திற்கு மேல் நிறுத்துவது, ரத்து செய்வது,  ரயிலை தேவைக்கு மெதுவாக இயக்குவது, பராமரிப்புக்கு அனுப்பாமல் தவிர்ப்பது கூடாது. பெட்டிகளில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் குறைபாடுகள்,  புகார்கள் இதர பராமரிப்பு தேவைகளை ஈடு செய்ய முறையான நடவடிக்கை குழு வைத்திருக்க வேண்டும். அது ரயில்வே கண்ட்ரோல் ரூமுடன்  தொடர்பு உருவாக்கி கொள்ள வேண்டும். பெட்டிகள் பராமரிப்பிற்கு ரயில்யார்டுகளை மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

தனியார் ரயில்கள் வரைவுத் திட்டத்தின் முக்கிய சாராம்சம் தனியார் ரயில் களுக்கு 35 ஆண்டுகள் அனுமதி, 15 நிமிடம் வரை காலதாமதமாக  புறப்படலாம். கட்டணத்தை நிர்ணயித்து கொள்ளலாம். ஊனமுற்றோர், மூத்த குடிமக்கள், நோயாளிகள் போன்ற 53 வகையான பயணச் சலுகைகள்  தரத் தேவையில்லை. அரசு ரயில்களை விட தனியார் ரயில்கள் இயக்கவதில் முன்னுரிமை பெறும். காலதாமதத்திற்கு கட்டணம் திருப்பி தருவது  விளம்பர யுக்தி சரத்திற்குள் வராது.

ரயி+ல் பெட்டிகள் இறக்குமதி செய்யவோ, வெளியில் கொள்முதல் செய்யவோ அனுமதிப்பதால் ரயில்வே தொழிற்சாலைகள் உற்பத்தி திறன்  பாதிக்கும். ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணியாளர்கள், லோகோ பைலட்டுகள், கார்டுகள் பயணச்சீட்டு விநியோகஸ்தர்கள், ஓடும் ரயில்களின் ஏ.சி.  மெக்கானிக்குகள், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில் பெட்டிகளுக்கான எலக்ட்ரிசியன் , மற்றும் பிட்டர்கள் அனைத்து பிரிவு ஊழியர்களையும் தனியார்கள்  நியமிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ரயில்வே பணியாளர்கள் பயிற்சி பள்ளி களுக்கும் உருவாக்கி கொள்ளவும் அனுமதி  வழங்கப்பட்டு இருக்கிறது.எனவே 150 தனியார் ரயில்கள் அறிமுகத்தால் 28 ஆயிரம் தொழிலாளர்கள் உடனடியாக வேலை இழப்பார்கள். சமூக மற்றும்  ஊழியர்கள் நலன் பாதிக் கும் திட்டம். மத்திய அரசு இந்த திட்டத்தை உடனே கைவிட வேண் டும். இவ்வாறு மனோகரன் கூறினார்.



Tags : DREU , Employees, layoffs, DREUs, emphasis, trains, privatization, privatization
× RELATED ரயில்வே மருத்துவமனையில் பணிநீக்கம்...