×

2012ல் நிர்பயாவுக்காக யார் யார் போராடினார்களோ, அவர்கள் தற்போது அரசியல் விளையாட்டு விளையாடுகின்றனர்: நிர்பயாவின் தாயார் பேட்டி

புதுடெல்லி: தனது மகள் நிர்பயாவின் மரணத்தை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுவதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு 6 பேர் கும்பலால் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் என்பவர் சிறையில் தற்கொலை செய்து கொள்ள, சிறுவனான ஒரு குற்றவாளி 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானான். மீதமுள்ள முகேஷ் குமார் சிங்32), பவன் குப்தா(25), வினய் சர்மா(26), அக்ஷய் குமார் சிங்(31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

விசாரணை நீதிமன்றம் விதித்த இந்த தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன. இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22ம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்கில் போட வேண்டும் என விசாரணை கோர்ட்டு கடந்த 7ம் தேதி மரண வாரண்டு பிறப்பித்தது. இதற்காக திகார் சிறையில் ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வந்தன. இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை வரும் 22ம் தேதி நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார். இந்த கருணை மனுவை டெல்லி துணை நிலை ஆளுநர் நிராகரித்து, அதனை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். அந்த மனுவை உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறுசீராய்வு மனுக்கள், மரண வாரண்டடை எதிர்த்து வழக்கு, கருணை மனு என தண்டனையை தள்ளிப்போடுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதால், நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆஷா தேவி, இதுவரை நான் அரசியல் பேசியதில்லை. ஆனால் இப்போது சிலரை பற்றி பேச விரும்புகிறேன். 2012ல் என் மகளின் மரணத்திற்காக யாரெல்லாம் தெருக்களில் இறங்கி போராடினார்களோ, அவர்கள் எல்லாம் இப்போது எனது மகளின் மரணத்தை அரசியல் ஆதாயத்திற்கான விளையாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள் என்று குற்றமசாட்டியுள்ளார்.



Tags : Nirbhaya, Mother, Asha Devi, Delhi
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...