×

எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்த நாள் இன்று : அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

சென்னை : எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். எம்ஜிஆர் சிலையுடன் அருகில் உள்ள ஜெயலலிதா சிலைக்கும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர்  கலந்துகொண்டு எம்.ஜி.ஆருக்கு  மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இனிப்புகளை வழங்கினர்.

பின்னர், கிண்டி எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமவரம் தோட்டத்துக்குச் செல்லும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குகிறார்.

Tags : MGR ,Birthday ,Deputy Chief Minister , 103rd birthday , MGR, Honor for his statue, Deputy, Chief Minister
× RELATED பிறந்தநாள் பார்ட்டி கொடுத்த பாடகி...