×

நிர்பயா பலாத்கார குற்றவாளிகளை தூக்கில் போடும் ஏற்பாடு எந்த நிலையில் இருக்கிறது? அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி நீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயாவை கடந்த 2012ம் ஆண்டு கூட்டுபாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல் பின்னர் ஓடும் பஸ்சில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தது. இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை வரும் 22ம் தேதி நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி இருப்பதால் தூக்கு தண்டனையை ஒத்திவைக்கும்படி குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், புதிய மனு செய்துள்ளார். இதை நேற்று விசாரித்த நீதிபதி, மரண தண்டனையை நிறைவேற்ற செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளின் நிலை பற்றிய அறிக்கையை இன்று தாக்கல் செய்யும்படி திகார் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

* தூக்கு போடும் சிறைக்கு 4 பேரும் திடீர் மாற்றம்
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் தற்போது திகார் சிறையில் 4 மற்றும் 2ம் எண் சிறை அறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நேற்று மாலை திடீரென 3ம் எண் சிறைக்கு மாற்றப்பட்டனர். இங்குதான் இவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : rapists ,rape victims , Nirbhaya, rapist, sleeping, reporting, court, order
× RELATED நிர்பயா பலாத்கார கொலை குற்றவாளிகளை...