×

முதல் இடத்தை தக்க வைத்தது வாட்ஸ்அப் பேஸ்புக்கை பின்னுக்கு தள்ளியது டிக் டாக்: 70 கோடி பேர் பதிவிறக்கம்

புதுடெல்லி: இணைய தளத்தை பொருத்தவரை ஒவ்வொரு நாளும் எண்ணற்ற புதுப்புது செயலிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஆனால், இவை அனைத்தும் பிரபலம் அடைவதில்லை. ஆனால், கடந்த 2016ல் சீனாவில் அறிமுகமான `டிக் டாக்’ செயலி அசூர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்தாண்டு 70 கோடி பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனால், உலகளவில் 2வது இடத்தில் இருந்த பேஸ்புக், பேஸ்புக் மெசஞ்சர் செயலிகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 85 கோடி பயனாளர்களுடன் வாட்ஸ்அப் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. ஆனால், கடந்த நான்கு காலாண்டுகளாக தொடர்ந்து சரிவை கண்டு வந்த வாட்ஸ்அப்பின் பதிவிறக்கம், கடைசி காலாண்டில் மட்டும் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்சார் கோபுர அறிக்கையின்படி, டிக் டாக் செயலியை இளைஞர்கள் அதிகளவில் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதே நேரம், டிக் டாக் செயலியில் ஹேக்கர்களால் அதிகளவு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக இணையதள பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யும் செக்பாயின்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Tags : Digg , WhatsApp, Facebook, Push, Tic Tac, 70 Crores, Download
× RELATED அ.தி.மு.க. பிரமுகர் விடுதிக்கு குறைவான வரி விதித்திருப்பதாக புகார்