×

புதுவை பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவராக சாமிநாதன் எம்எல்ஏ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016 ஜனவரி மாதம் புதுச்சேரி மாநில பாஜக தலைவராக சாமிநாதன் தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் 2018 டிசம்பருடன் முடிந்தது. நாடாளுமன்ற தேர்தல் வந்ததால், மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் ஜன.16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று புதுவை பாஜக அலுவலகத்தில் புதிய தலைவர் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. இதில் மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் மற்றும் தமிழ்நாடு பொதுச்செயலாளர் நரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சாமிநாதன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Tags : Puthuvai ,Saminathan ,BJP , Puthuvai, BJP leader, Saminathan, re-elected
× RELATED ‘கொலீஜியத்தால் சுதந்திரமான...