×

லாரி மோதி இன்ஜினியர் பலி தந்தைக்கு ரூ.86 லட்சம் இழப்பீடு

சென்னை: லாரி மோதி உயிரிழந்த இன்ஜினியரின் தந்தைக்கு ரூ.86 லட்சம் இழப்பீடு வழங்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அம்பத்தூரை சேர்ந்தவர் விஜயராகவன் (32). இன்ஜினியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2012ல் மேடவாக்கம் - பெரும்பாக்கம் சாலையில், பைக்கில் சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி விஜயராகவனின் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பலியானார். இதையடுத்து, தனது மகனின் இறப்பிற்கு இழப்பீடு வழங்க கோரி விஜயராகவனின் தந்தை ஜெயராமன் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.சுதா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் லாரியை ஓட்டியதால்தான் மனுதாரரின் மகன் பலியானார். இதை போலீசார் தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கை, உடற்கூறு ஆய்வு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களும், சாட்சியங்களும் தெளிவுபடுத்தியுள்ளன.
எனவே, லாரி இன்சூரன்ன்ஸ் செய்யப்பட்டுள்ள எல் அண்ட் டி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரருக்கு ரூ.86 லட்சம் இழப்பீடாக தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : lorry collision engineer , Larry Moti, engineer, victim, father, Rs.86 lakh, compensation
× RELATED லாரி மோதி இன்ஜினியர் உயிரிழப்பு...