×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டெருமை, நீல மான் குட்டிகளை பார்வையாளர்கள் கண்டுகளிக்கலாம்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டெருமை மற்றும் நீல மான் குட்டிகளை பார்வையாளர்கள் கண்டு களிக்கலாம். இதுதொடர்பாக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்ததொரு வனஉயிரின இனப்பெருக்க மையமாகத் திகழ்கிறது. நிர்வாகத்தின் நல்ல வழிமுறைகள் மற்றும் சத்தான உணவுகள் அளிப்பதனால் பூங்காவில் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பூங்காவில் உள்ள இந்திய காட்டு மாடு ராகுல் மூலம் ரீமா என்ற இணை சமீபத்தில் ஒரு பெண் குட்டி ஈன்றது. தற்சமயம் உயிரியல் பூங்காவில் 24 காட்டுமாடுகள் உள்ளன. இவை அருகருகே உள்ள இரு இருப்பிடங்களில் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆசியாவின் பெரும் குளம்பினம் மற்றும் இந்திய கண்டத்தில் மட்டுமே காணப்படும் நீலமான் மிகச்சிறந்த முறையில் இங்கு இனப்பெருக்கம் செய்து வருகின்றன. நீலமான் இணை சமீபத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. தற்சமயம் பூங்காவில் 11 நீலமான்கள் உள்ளன. பூங்காவில் இந்திய பழுப்புநிற ஓநாயும் சிறந்த முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. கீர்த்தி மற்றும் வசந்தன் இணை ஓநாய்கள் சமீபத்தில் 4 ஆண் மற்றும் 3 பெண் குட்டி என மொத்தம் 7 குட்டிகளை ஈன்றது. இந்த இணை இத்துடன் மூன்றாவது முறையாக குட்டிகளை வெற்றிகரமாக ஈன்றுள்ளது. புதிதாக பிறந்துள்ள குட்டிகள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் நல்ல முறையில் பாரமரிக்கப்பட்டு வரப்படுகின்றன. காணும் பொங்கல் நாளில் பார்வையாளர்களை மகிழ்விக்க பலவிதமான சிறப்பு ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் புதிதாக பிறந்த காட்டு மாடு, நீல மான் மற்றும் ஓநாய் குட்டிகளை கண்டுகளிக்கலாம்.

Tags : Visitors ,Vandalur Zoo , Vandalur, zoo, jungle, blue deer
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று சுவர் இடிப்பு