×

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியை புறக்கணிப்போம்: ஜவாஹிருல்லா கோரிக்கை

சென்னை: மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ற நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் சார்பில் கடந்த ஜனவரி 11ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தினசரிகளில் வாடிக்கையாளரை அறிவோம் குறித்த ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது. இந்த விளம்பரத்தில் ஜனவரி 31க்குள் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றி தெரிவிப்பதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் வரிசையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பதிவு கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த சூழலில் நமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் நடவடிக்கையைக் கண்டித்து அந்த வங்கியை அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Central Bank of India ,Jawahrullah ,Central ,Bank of India ,Jawahirullah ,Bank , Central, Bank of India Bank, Ignore, Jawahirullah, Request
× RELATED ஊட்டி மைய நூலகத்தில் நடந்த கோடை கால பயிற்சி நிறைவு