×

இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி வெற்றியை தொடங்குமா இந்தியா: தொடரை வெல்லுமா ஆஸ்திரேலியா

ராஜ்கோட்: முதல் வெற்றிக்காக இந்தியாவும், தொடர் வெற்றிக்காக ஆஸ்திரேலியாவும் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரா வெற்றி பெற்றது. இப்போது ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற உள்ளது. தொடரை வெலும் முனைப்பில் ஆஸ்திரேலியாவும், முதல் வெற்றிக்காக இந்தியாவும் இந்தப் போட்டியில் களம் காண உள்ள. தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த விராட் கோஹ்லி தலைமையிலான இந்தியாவுக்கு அதிர்ச்சிகரமான தோல்வியை தந்தது ஆஸ்திரேலியா.  

எனவே வரலாற்று சாதனை புரிந்த இந்த ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றவும் இருக்காது. முதல் போட்டியில் விளையாடிய அதே அணி களம் காணலாம். இமாலய தோல்விக்கு பிறகு இந்திய இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது. தோல்வியில் இருந்து சட்டென்று மீள்வது இந்தியாவுக்கு புதிதல்ல. வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசத்துக்கு எதிரான சமீபத்திய தொடர்கள் அதற்கு உதாரணங்களாக இருக்கின்றன. வென்றாக வேண்டும் என்று களம் காண உள்ள இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கலாம். பந்து வீச்சாளர்கள் வரிசையில், நடுவரிசையில் கட்டாயம் மாற்றம் இருக்கும்.

கோஹ்லிக்கு பிடித்த ரிஷப் பண்ட் காயம் அடைந்துள்ளதால் திறமையான வீரர்கள் யாருக்காவது வாய்ப்பு கிடைக்கலாம். இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 4ல் ஆஸ்திரேலியாவும், ஒருப்போட்டியில் இந்தியாவும் வென்றுள்ளன. ஆஸ்திரேலியா வென்ற 4 போட்டிகளும் இந்திய மண்ணில் நடந்த போட்டிகள். இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா. எப்படி இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க முழு வேகத்துடன் இந்தியா இன்று களம் காணும். ஆஸ்திரேலியாவும் அதை சமாளிக்கும் திட்டத்துடன் களமிறங்கும். அதனால் முதல் போட்டியை போன்று எந்த அணிக்கும் இன்று எளிதாக வெற்றி கிடைக்காது.

Tags : ODI ,India , Second, ODI, Win, India, Australia
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...