கஞ்சா வியாபாரிகள் துப்பாக்கியுடன் கைது

மதுரை: மதுரை ஆணையூர் முத்துநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனடிப்படையில் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த டூவீலரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சோதனையில், அவர்களிடம் 550 கிராம் கஞ்சா மற்றும் பிஸ்டல் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் ஆணையூர் பகுதியைச் சேர்ந்த அழகுபிள்ளை(36), முத்துநகர் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன்(24) என தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த பிஸ்டல் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அவர்கள் எங்கு துப்பாக்கி வாங்கினார்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் குணசேகரன் வீட்டில் 6 துப்பாக்கி மற்றும் 100 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடதக்கது.


Tags : Cannabis,Traders,Arrested, Gun
× RELATED போக்சோவில் முதியவர் கைது