×

சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இந்த வருட மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த டிச,30ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. 31ம் தேதி முதல் மகர விளக்கு கால பூஜைகள் தொடங்கின. தினமும் கணபதிஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடந்தது. மண்டல காலத்தை போலவே மகர விளக்கு காலத்திலும் சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்த நிலையில் நேற்று மகர விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக நேற்று அதிகாலை சுமார் 2.09 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடந்தது. அதிகாலையில் இந்த பூஜை நடந்ததால் நேற்று முன்தினம் இரவு கோயில் நடை சாத்தப்படவில்லை. நேற்று மாலை பந்தளத்தில் இருந்து ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. 5.45 மணியளவில் இந்த ஊர்வலம் சரங்குத்தியை அடைந்தது. அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகிகள் திருவாபணரத்துக்கு வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து இந்த ஊர்வலம் சன்னிதானத்தை நோக்கி புறப்பட்டது.

6.35 மணியளவில் சன்னிதானத்தை அடைந்த இந்த திருவாபரணம் பேடகத்தை தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் வாங்கி கோயிலுக்குள் கொண்டு ெசன்றனர். பின்னர் கோயில் நடை சாத்தப்பட்டது. அப்போது திருவாபரணம் ஐயப்ப விக்ரகத்திற்கு அணிவிக்கப்பட்டது.பின்னர் நடை திறந்து தீபாராதனை நடத்தப்பட்டது. இதேசமயத்தில் 6.51 மணிக்கு பொன்னம்பல மேட்டில் முதல் ஜோதி தெரிந்தது. பின்னர் அடுத்தடுத்து 2 முறை மகர ஜோதி தெரிந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என சரண ேகாஷம் முழங்கினர். வரும் 20ம் ேததி இரவு வரை கோயில் நடை திறந்திருக்கும். அன்று வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 19ம் தேதி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 21ம் தேதி காலை 7 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்று பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதியில்லை. அதனுடன் இவ்வருட மகர விளக்கு காலம் நிறைவடையும்.

Tags : Capricorn Jyoti ,Tens of thousands ,Sabarimalai Ponnambalamate ,devotees ,Visit ,Tens , Capricorn Jyoti, Sabarimalai Ponnambalamate, Tens ,thousands, devotees visit
× RELATED உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம்!!