×

தேசிய அரசியல் காட்சிகளில் பா.ஜனதாவுக்கு அதிக வருமானம்... தேர்தல் செலவு கணக்கு அறிக்கை தாக்கல்

டெல்லி : தேசிய அரசியல் கட்சிகள் தங்கள் வருமான, செலவு விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளனர்.அதன்படி 6 தேசிய கட்சிகள் 2018-19-ம் நிதி ஆண்டில் கிடைத்த மொத்த வருமானம் ரூ.3698 கோடி என்று தெரிய வந்துள்ளது. இதில் பாரதிய ஜனதா தளம், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய 6 கட்சிகளில் வருமானத்தை பெறுவதில் பா.ஜனதா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அதன்படி பா.ஜனதா கட்சிக்கு ஒர் ஆண்டில் ரூ.2,410 கோடி வருமானம் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.918 கோடி ,திரிணாமுல் காங்கிரசுக்கு ரூ.192 கோடி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ரூ.100 கோடி வருமானம் கிடைத்துள்ளன. பா.ஜனதா கட்சிக்கு முந்தைய ஆண்டை விட 2018-19-ம் நிதி ஆண்டில் 134 சதவீதம் அதிக வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருமானம் தேசிய கட்சிகளுக்கு அன்பளிப்பு மற்றும் பங்கு தொகைகள் மூலம் வருமானம் கிடைத்து இருப்பதாக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வருவாயில் பா.ஜனதா கட்சி சுமார் 50 சதவீதத்தை செலவிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலுக்கும், 4 மாநில சட்டசபைக்கும் பா.ஜனதா கட்சி 1264 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் 1,078 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. வேட்பாளர்களுக்கு ரூ.186 கோடியை கொடுத்துள்ளது. பொதுக்கூட்டங்கள் நடத்த ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாநில கட்சிகள் தேர்தலுக்காக அதிகம் செலவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : BJP , BJP earns ,highest income , national politics
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...