காவி உடையுடன் இருக்கும் வள்ளுவர் புகைப்படத்தை நீக்கினார் வெங்கையா நாயுடு

டெல்லி : திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திருவள்ளுவர் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காவி உடையுடன் இருக்கும் வள்ளுவர் படத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அவர் பதிவில் தமிழ் கவிஞர், தத்துவஞானி, துறவி என திருவள்ளுவரை புகழ்ந்த வெங்கையா நாயுடு, திருக்குறள் மூலம் அறத்தின்படி எப்படி வாழ்வது என வழிகாட்டியவர் திருவள்ளுவர் எனவும் ஆங்கிலத்தில் புகழாரம் சூட்டினார். மேலும் அந்த பதிவிற்கு காவி உடையுடன் இருக்கும் வள்ளுவர் படத்தை பகிர்ந்திருந்தார்.

மேலும் சிறந்த தமிழ்ப் புலவர், தத்துவவாதி, ஞானி என்று திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது என்று திருவள்ளுவரை புகழ்ந்து வெங்கையா நாயுடு தமிழில் ட்வீட் செய்திருந்தார். அந்த பதிவிற்கு வெள்ளை உடையுடன் இருக்கும் வள்ளுவர் படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் காவி உடையுடன் இருந்த திருவள்ளுவர் புகைப்படத்தை ட்விட்டரில் இருந்து குடியரசு  துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நீக்கினார்.

Related Stories:

>