×

ரூபாய் நோட்டின் மதிப்பு உயர லட்சுமியின் படத்துடன் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவேண்டும் : சுப்ரமணிய சுவாமி

போபால் : அமெரிக்க - ஈரான் இடையே போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் சுவாமி விவேகானந்த வ்யக்யன்மாலா என்ற சொற்பொழிவுத் தொடரில் உரையாற்றிய சுப்பிரமணியன் சுவாமி இந்தோனேசிய நாட்டு கரன்சியில், விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளதாகவும், விநாயகர் தடைகளை நீக்குபவர் என்றும், இதை கருத்தில் கொண்டு, இந்திய ரூபாய் நோட்டிகளில் லட்சுமியின் படம் அச்சிட தான் ஆதரவு தெரிவிப்பதாகவும், இதுகுறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தம் சட்டத்தில் ஆட்சேபனைக்குரியது எதுவுமில்லை என்றும் காங்கிரஸ் கட்சியும் ,மகாத்மா காந்தியும் இதையே (சி.ஏ.ஏ) கோரின என்றும் தெரிவித்தார். மன்மோகன் சிங் 2003 ல் நாடாளுமன்றத்திலும் இதனை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினார். அதை ஆளும் பாஜக அரசு செய்துள்ளது. பாகிஸ்தானின் முஸ்லிம்களுக்கு நாங்கள் அநீதி இழைத்தோம் என்றனர் இப்போது அவர்கள் அதை ஏற்கவில்லை. என்ன அநீதி இழைக்கப்பட்டது? பாகிஸ்தானின் முஸ்லிம்கள் இந்தியா  வர விரும்பவில்லை, யாரும் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறினார்.


Tags : Lakshmi ,Subramania Swamy , Business news,Uniform Civil Code,Swami Vivekananda,subramanian swamy,manmohan singh,mahatma gandhi,Constitution of India
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!