×

அமெரிக்கா-சீனா இடையே நடந்த வந்த வர்த்தக போர் முடிவுக்கு வந்தது..!

வாஷிங்டன்: வர்த்தக போரை நடத்தி வந்த அமெரிக்கா - சீன நாடுகள் தற்போது பரஸ்பரம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்குகொண்டு வந்துள்ளன. சீனாவுக்கும் , அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக வர்த்தக மோதல் கடந்த ஓராண்டாக நடந்து வந்தது.

கடந்தாண்டு ஜூனில் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஷி ஜிங்பிங் இடையிலான சந்திப்பின் போது, சீன பொருட்களுக்கு புதிதாக வரி விதிப்பதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஒப்பு கொண்டது. இதையடுத்து இரு நாடுகளும் இது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்வதென முடிவு செய்தன.


இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் - சீன துணை பிரதமர் லீயு ஹி ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வர்த்தக போரை நடத்தி வந்த அமெரிக்க- சீன நாடுகள் இன்று முதற்கட்ட ஒப்பந்தம் ஏற்படுத்தி வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன. இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே புதிய நட்பு மலர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Trade war ,US ,China , US ,China ,trade frictions.
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...