×

நிர்பயா கொலை வழக்கு : தள்ளிப்போகுமா குற்றவாளிகளின் தூக்கு ?

டெல்லி : நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதற்கான உத்தரவு (மரண வாரண்டு) கடந்த 7-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி குடியரசு தலைவருக்கு, குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அளித்தார். இந்நிலையில், தண்டனைக்கு எதிராக முகேஷ் சிங் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முகேஷ் சிங்கின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருப்பதால், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி 22-ம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற இயலாது என டெல்லி அரசு தெரிவித்தது. குற்றவாளியின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்த பின்னர் குற்றவாளிகளுக்கு அது தொடர்பாக 14 நாட்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருப்பதை நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்தது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தண்டனை நிறைவேற்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Tags : Nirbhaya Murder Case,guilty be executed?
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!