ரஷ்யா: ரஷ்யா பிரதமர் டிமிட்ரி மெத்வடேவ் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் புதினிடம் அளித்தார். ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வடேவ் தனது பிரதமர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அதிபர் புதினிடம் அவர் வழங்கினார். பிரதமராக மெத்வதேவ் ஆற்றிய பணியை பாராட்டி, நன்றி தெரிவித்த அதிபர் புதின், மெத்வதேவின் நோக்கங்களை, பிரதமரின் கேபினட் நிறைவேற்றத் தவறிவிட்டது என தெரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிபர் பாதுகாப்பு கவுன்சிலில், மெத்வதேவை அதிகாரியாக நியமிக்க புதின் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வடேவ்வின் ராஜினாமா குறித்த காரணங்கள் வேறு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் ரஷ்யா பிரதமர் டிமிட்ரி மெத்வடேவ்வின் ராஜினாமா கடித்தத்தை புடின் பெற்றுக் கொண்டார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மிகவும் நெருக்கமான திமித்ரி மெத்வதேவ், 2012 முதல் ரஷ்யாவின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். 2008 - 12ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.