×

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதில் 43 பேர் காயம்

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 43 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி மாலை 4 மணிவரையிலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்‍கட்டில் காளைகள் முட்டியதில் இதுவரை 43 பேர் காயமடைந்தனர். அவர்களில் 8 பேர் மேல் சிகிச்சைக்‍காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டனர். வாடிவாசலில் இருந்து வெளிவரும் காளை கூட்டத்தில் பாய்வதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. சீறிவரும் காளைகளை அடக்க இளைஞர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர்.

Tags : bullock accident ,competition ,Madurai Avaniyapuram Jallikattu ,Madurai Avaniyapuram Jallikattu Competition During Bullock Accident , 43 injured ,bullock , Madurai Avaniyapuram Jallikattu,competition
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு போட்டி