×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : நீதிபதி கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளுடன் மதுரை ஐகோர்ட் கிளையில் ஏராளமானோர் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமுகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து நடத்த ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் படி இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடந்து வருகிரது.

ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆண்டுகளாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் நடத்தி வருகிறது. இது எங்களது பாரம்பரிய உரிமை ஆகும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதனை அடுத்து  உத்தநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தற்போது உள்ள  நிலையில் ஜல்லிக்கட்டை நிறுத்த நாங்கள் விரும்பவில்லை. வேண்டுமானால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம் என அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Supreme Court ,Avaniyapuram Jallikattu ,group ,panel , Petition ,Avaniyapuram ,Jallikattu ,panel
× RELATED லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிரான...