×

பழநியில் தடை செய்யப்பட்ட குட்கா 25 கிலோ பறிமுதல்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் அதிகளவு வருகின்றனர். இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக தற்போது பழநி நகரில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கடைகள் பலவற்றில் தடை செய்யப்பட்ட குட்கா- புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் நடராஜன், பழநி உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் செல்லத்துரை, சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் 25க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி ஆய்வு செய்தனர்.இதில் 25 கிலோ அளவுள்ள குட்கா- புகையிலை பொருட்கள், 5 கிலோ பிளாஸ்டிக் பைகள், 5 கிலோ பிளாஸ்டிக் டீ டம்ளர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. பல கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டது.



Tags : Palani , Palani 25 kg , banned, kutka
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்