×

வைகுண்ட ஏகாதசி குளறுபடி உள்பட பல்வேறு குற்றச்சாட்டு எதிரொலி பார்த்தசாரதி கோயில் உதவி ஆணையர் திடீர் பணியிட மாற்றம்: அறநிலையத்துறை அதிரடி

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு துணை ஆணையர் நிலையிலான அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். ஆனால் சென்னை மண்டல நகை சரிபார்ப்பு உதவி ஆணையர் ஜோதி லட்சுமி விதிமுறைகளை மீறி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பேரில் கடந்த ஜூன் மாதம் ஜோதிலட்சுமி பணி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், ஒரு சில நாட்களிலேயே அந்த பணியிட மாற்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்திற்கு பணியில் சேர்ந்தார். இந்நிலையில்  கந்தகோட்டம் முருகன் கோயிலில்   10 வெள்ளி காசுகளை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறி அவருக்கு ஓராண்டு பதவி உயர்வு பெற தடை விதித்து கமிஷனர் உத்தரவிட்டார். அதேபோன்று, ரூ.36 லட்சம் உண்டியல் பணத்தை மாற்றாத காரணத்துக்காகவும் அவர் மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 6ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. விழாவில் முறையான ஏற்பாடுகள் அவர் செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. எனவே அவரை மீண்டும் ஈரோடு உதவி ஆணையராக பணி இடமாற்றம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.  அவருக்கு பதிலாக இணை ஆணையர் காவேரியிடம், பார்த்தசாரதி கோயில் துணை ஆணையர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. அதேபோன்று ஜோதிலட்சுமி வைத்து வந்த நகை சரிபார்ப்பு அலுவலர் பொறுப்புக்கு கரூர் உதவி ஆணையராக இருந்த சூரிய நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று ஈரோடு உதவி ஆணையர் நந்தகுமார் கரூர் உதவியாளராகவும் பணியிடமாற்றம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Vaikunda Ekadasi ,Assistant Commissioner ,Parthasarathy Temple , Vaikunda Ekadasi, mess, variety, including the charge, echo
× RELATED ஏப்.19ல் ஊதியத்துடன் விடுப்பு அளிக்காத...