×

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த விற்பனை பணவீக்கம் 11.05% ஆக உயர்வு: ஒரே மாதத்தில் 2.59% அதிகரிப்பு

புதுடெல்லி: உணவு மொத்த விற்பனை பணவீக்கம் கடந்த டிசம்பரில் 11.05 சதவீதமாக உயர்ந்தது. அதற்கு முந்தைய மாதத்தில் இந்த பணவீக்கம் 9.02 சதவீதமாக இருநத்து குறிப்பிடத்தக்கது. ஒரே மாதத்தில் 2.59 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த விற்பனை பணவீக்கம் என்பது, மொத்த விற்பனை விலை விகிதம் மொத்த விற்பனை விலை குறியீட்டால் நிர்ணயம் செய்யப்படுகிறது.  மொத்த விலை பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் 2.59 சதவீதம் உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய மாதத்தில் 0.58 சதவீதம் தான் உயர்ந்து இருந்தது. நவம்பரில் 9.02 சதவீதமாக இருந்தது. கடந்த 2014 ஜூலையில் இருந்ததைவிட கடந்த டிசம்பரில் பணவீக்கம் மோசமாக உயர்ந்துள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பணவீக்கம் உயர்ந்தது ஏன்? எதற்கு? 10 முக்கிய அம்சங்கள்

1.உணவு மொத்த விற்பனை பணவீக்கம் டிசம்பரில் 11.05 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய மாதத்தில் 9.02 சதவீதமாக இருந்தது. மத்திய அரசு செவ்வாயன்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு, தானியங்கள் விலை கடுமையாக உயர்ந்ததால் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

2.கடந்த சில வாரங்களாக வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்ததால் உணவு மொத்த விற்பனை பணவீக்கம் அதிகரித்துள்ளது.

3. 2019-20 நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து மொத்த விற்பனை பணவீக்கம் சரிந்தே காணப்பட்டது. ஆனால், வெங்காயம் விலை உயர்வு காரணமாக கடந்த செப்டம்பரில் பணவீக்கம் ஏறுமுகத்திற்கு சென்றுவிட்டது.

4.வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்தது. இதனால், விலை 69.69 சதவீதம் வரை உயர்ந்தது. இதனால் பணவீக்கம் உயர்ந்தது.

5.நுகர்வோர் பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் 4 சதவீதம் என்ற இடைக்கால இலக்கைத் தாண்டியது. தொடர்ந்து மூன்று மாதங்களாக நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

6.ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை வகுப்பதற்கு நுகர்வோர் பணவீக்க புள்ளிவிவரங்களை அடிப்படையாக எடுத்துக் கொள்கிறது. இதனால்தான் கடந்த 2019ல் 1.35 சதவீதம் அளவுக்கு ரெப்போ வட்டி வகித்தத்தைக் குறைத்தது. ஆனால், வட்டி விகிதத்தைக் குறைத்தபோதிலும் டிசம்பரில் பணவீக்கம் குறையாதது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

7.இருப்பினும், பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் ஏப்ரலில் வட்டி வகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் பணவீக்கம் நிதானமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8.நுகர்வு குறைவு, வேலையிழப்பு, தொழில் துறை உள்பட பல்வேறு துறைகளில் நிலவும் மந்தநிலையால் வேலையில்லா திண்டாட்டம் போன்ற காரணங்களால் பொருளாதாரம் மந்த நிலையிலேயே கடந்த 6 ஆண்டுகலாக நீடிக்கிறது. வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப முடியாமல் பொருளாதாரம் திண்டாடி வருகிறது.

9.இந்த நிதியாண்டின் இறுதியில் நாட்டின் மொத்த பொருள் உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று அரசு கணித்துள்ளது.

10.கடந்த 11 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு ஜிடிபி வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால் பொருளாதாரம் வளர்ச்சி பெறவில்லை. இதை மாற்றுவதற்கு மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Total sales, inflation increased , 11.05% in 6 years
× RELATED சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே...