×

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் டிஎஸ்பி கைதில் பெரிய சதி: பிரதமர் விளக்கம் தர வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

ஜம்மு: காஷ்மீரில் 2 முக்கிய தீவிரவாதிகளை காரில் அழைத்துச் சென்ற போலீஸ் டிஎஸ்பி தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. டெல்லியில் நாச செயல் செய்வதற்காக இரு தீவிரவாதிகளையும் அவர் அழைத்துச் செல்லும் முன்பாக பிடிபட்டுள்ளார். இந்தநிலையில், காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தீவிரவாதிகளுடன் டிஎஸ்பி கைதானதின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. இதை அவர் தனி ஆளாக செய்திருக்க முடியாது.  இதனால் கடந்த ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதல் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் குறித்தும் சந்தேகம் எழுகிறது’’ என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘தீவிரவாதிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி யார் உத்தரவை டிஎஸ்பி நிறைவேற்றினார்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை பற்றி முழு விசாரணை நடத்தி, அதன் தகவல்கள் குறித்து பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விளக்கமளிக்க வேண்டும்’’ என்றார்.இதற்கிடையே, காஷ்மீர் ஆளுநர் முர்முவின் தனி ஆலோசகரா்ன பரூக்கான் அளித்த பேட்டியில் கூறியதாவது: எல்லா துறையில் ஒரு கறுப்பு ஆடு இருக்கும். அந்த வகையில் போலீஸ் துறையில் உள்ள கறுப்பு ஆடு, டிஎஸ்பி தேவிந்தர் சிங். அவரை கண்டுபிடித்த பெருமை போலீசையே சேரும். பல போலீசாரின் தியாகத்தின் உருவானது போலீஸ் சீருடை. எனவே, தேவிந்தர் சிங்கால் போலீஸ் துறைக்கு எந்த களங்கமும் ஏற்படாது. இந்த விஷயத்தை அரசியல் ஆக்குவது சரியல்ல. இது நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்டது  என்றார்.

Tags : DSP ,militants ,arrest ,Kashmir ,extremists , extremists in Kashmir, DSP detained, big plot
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...