×

புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவால் போட்டி

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, முதல்வர் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. இந்நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி நேற்று தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதன்படி, முதல்வர் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும், துணை முதல்வர் சிசோடியா பட்பர்காஞ்ச் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மக்களவை தேர்தலில் ேதாற்ற திலீப் பாண்டே, அதிஷி மற்றும் ராகவ் சத்தாவுக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் இப்போதைய எம்எல்ஏ.க்களில் 15 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இப்பட்டியலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 8 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : contest ,Kejriwal ,New Delhi , New Delhi seat, Kejriwal, contest
× RELATED டெல்லியில் சலூன் கடைகளை திறக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி