கைதியுடன் சேர்ந்து மது குடித்த போலீஸ்காரர்கள்

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அன்பழகன் என்பவர் கடந்த 4ம் தேதி, பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில், மல்லியகரை போலீசார் கைது செய்து, ஆத்தூரில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் அவரை  ஏட்டு இளங்கோ, போலீஸ்காரர் சுதாகர் ஆகியோர் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாலையில் மீண்டும் அவரை சிறையில் அடைக்க கொண்டு சென்றனர். சிறை அதிகாரிகள், அன்பழகனை பரிசோதித்தபோது, போதையில் இருந்தது தெரிந்தது. உடன் வந்த ஏட்டு இளங்கோ, போலீஸ்காரர் சுதாகர் ஆகியோரும் போதையில் இருந்தனர். ஜெயிலர் பவுன்ராஜ் தகவலின்படி ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ விசாரணை நடத்தினார். அதில், கைதியுடன் சேர்ந்து ஏட்டு இளங்கோ, போலீஸ்காரர் சுதாகர் மது குடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் அதிரடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டார்.


Tags : prisoner , Prisoner, alcoholic, policemen
× RELATED ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதி திடீர் மரணம்