×

பொங்கல் திருநாள் கவர்னர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கவர்னர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித்: பொங்கல் நாளில் அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும், செழிப்பையும் அள்ளித்தர வாழ்த்துகின்றேன். முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி: பொங்கல் நாளில், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென்று எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: பொங்கல் விழா நம்மை எல்லாம் தலைநிமிர செய்யும் தமிழர் விழா. குடும்பம், குடும்பமாக, அன்புடன் வளர்க்கும் பசுவும், கன்றும் ஒரு சேர தங்கள் அன்புக்குரல் எழுப்ப எல்லாரும் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா ஆளுநர்): தமிழக மக்கள் வாழ்வில் அன்பு, பாசம், செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் பொங்கி பெருக வேண்டுமென்றும் வாழ்த்துகிறேன்.

கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ் தலைவர்): தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்றம் பெற பொங்கல் திருநாளில் மனப்பூர்வமான வாழ்த்துகள்
ராமதாஸ்(பாமக நிறுவனர்): உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
வைகோ(மதிமுக பொது செயலாளர்): தைப்பொங்கலைக் கொண்டாடி வருகின்ற தமிழக மக்களுக்கு, மகிழ்ச்சியூட்டும் காலத்தை உருவாக்க, அனைவரும் உறுதி ஏற்போம். தமிழக மக்களுக்குத் தைப்பொங்கல் வாழ்த்துகள்.
விஜயகாந்த்(தேமுதிக தலைவர்): பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக வேண்டும்.
ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இத்தருணத்தில் தமிழர்கள் வாழ்வில் புதியன புகுந்து அவை நல்லவையாக அமைந்து அவர்களின் வாழ்வு மேம்பட இயற்கையும், இறைவனும் துணை நிற்க வேண்டுகிறேன்.

அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்): பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்குவதைப் போன்று, நமது வாழ்க்கையில் வளங்களும், நலங்களும், மகிழ்ச்சியும், வளர்ச்சியும் பொங்க தைத்திருநாள் வகை செய்யும். தை பிறக்கும் நாளில் நமது வாழ்விலும் புதிய வழிகள் பிறக்கும்; அவை மலர்ச்சியை அளிக்கும் என்று கூறி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
கே.பாலகிருஷ்ணன்(சி.பி.எம்.மாநில செயலாளர்): தைப்பொங்கல் சாதி, மதம் கடந்த திருநாள். இயற்கையையும், உழைப்பையும் போற்றுகிற உழவர்களின் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  
திருமாவளவன்(விசிக தலைவர்): இந்தியாவில் மதசார்பற்ற ஒரே திருவிழா தமிழர் திருநாள்தான். அத்தகைய புரிதலோடு இவ்விழாவில் மக்களோடு இணைந்து பங்கேற்க வேண்டுகிறேன். எமது உயரிய தமிழ்மக்கள் யாவருக்கும் உள்ளம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்.

சரத்குமார்(சமக தலைவர்): அன்பு கலந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை என் உயிர் தமிழ் சமுதாயத்திற்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
அபுபக்கர்(இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர்): விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல்,தொழில் துறை என மற்ற அனைத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விவசாயத்திற்கும் கொடுப்போம்.
இதே போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், வசந்தகுமார் எம்பி, மஜக பொது செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் என்.நாராயணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், வி.ஜி.சந்தோசம், அகில இந்திய ரியல் எஸ்ேடட் கூட்டமைப்பு தேசிய தலைவர் ஆ.ஹென்றி உள்ளிட்டோரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Governor ,Greetings ,Chief Minister ,leaders , Pongal Day, Governor, CM, Leaders, Greetings
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...