×

உழைப்பால் உயர்ந்து துணை குடியரசு தலைவர் ஆனவர் வெங்கையா நாயுடு: துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை: சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். வெங்கையா நாயுடு வெளியிட்ட சிறப்பு மலரை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் துக்ளக் சிறப்பு மலரை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிடமிருந்து நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். உழைப்பால் உயர்ந்து துணை குடியரசு தலைவர் ஆனவர் வெங்கையா நாயுடு என ரஜினிகாந்த் பேசினார். பத்திரிகைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்தவர் சோ என கூறினார்.

சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது எனவும், தற்போதைய சூழலில் சோ போன்ற பத்திரிகையாளர் அவசியம் தேவை என கூறினார். கவலைகள் அன்றாடம் வரும் எனவும், அதை நிரந்தரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில் தான் இருக்கிறது என தெரிவித்தார். முரசொலி வைத்திருந்தால் திமுக என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என கூறினார். சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர் எனவிம்; ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி என கூறினார். சோவை போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி என பேசினார். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்திருக்கலாம்; இதுவும் தந்தைக்குரிய பதவியே என கூறினார்.


Tags : Rajinikanth ,Venkaiah Naidu ,speech ,Tughlaq ,Tuklak , Venkaiah Naidu,Vice President,Labor rises,fame,Rajinikanth talks,Tuklak magazine
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...