×

சிறப்பு எஸ்.ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் 2 பேரை கைது செய்தது கர்நாடக காவல்துறை

பெங்களூரு: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கடந்த 8-ம் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் குற்றவாளிகள் பிடிபட்டதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குமரி மாவட்டம்  திருவிதாங்கோடு, நாகர்கோவில் இளங்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 பேர்தான் இந்த கொலையை செய்ததாக தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். குற்றவாளிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் இன்று காலை கர்நாடக மாநிலம் உடுப்பியில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுவார்கள் என கூறப்படுகிறது.


Tags : Karnataka Police ,shooting ,SI Wilson of Murder ,Special SI Wilson , Karnataka police arrest, two persons,search, murder,Special SI Wilson
× RELATED கீழ்பென்னாத்தூர் அருகே சாலை...