×

மரம் வளர்த்தால் புவி வெப்பமயமாதலை தடுக்கலாம்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் வடுவூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இயங்கி வரும் நமது கிராமம் அமைப்பு மற்றும் பாதை அறக்கட்டளை அமைப்பு சார்பில் வடுவூர் மேல்நிலைப்பள்ளி, புள்ளவராயன்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி, எடமேலையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, எடகீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வெட்டிக் காடு அரசு மேல்நிலைப்பள்ளி என 5 அரசுப்பள்ளிகளில் புவி வெப்பமயமாவதால், காலநிலை மாற்றம் மற்றும் மரங்கள் நடுதல் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது. முகாம்களில் நமது கிராமம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவகாந்தி மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். 


இதில் மரம் வளர்த்தால் புவி வெப்பமயமாதலை தடுக்கலாம், மரம் வளர்த்தால் மழை பெறலாம், மரம் வளர்த்தால் மண் அரிப்பைத் தடுக்கும், மரம் வளர்த்தால் உணவு, மூலிகைகள், இயற்கை வளங்கள் அதிகரிக்கும், மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வின்மை, பள்ளியை சுத்தம் செய்தல், சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்தல் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது. 


மேலும் மரக்கன்றுகளை நடுதல், பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழிப்பது, பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பை, பாக்கு மட்டையிலான பொருள்கள், தென்னை ஓலையில் நெய்யப்பட்ட பொருள்கள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்த மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் தமது பெற்றோரிடம் மரக்கன்றுகள் கேட்டு வாங்கி தங்களுடைய இல்லத்தில் நட வேண்டும். மரம் வளர வளர காற்று மாசுபடுதல் குறையும். புவி வெப்பமயமாதல் முற்றிலும் தடுக்கப்படும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இம்முகாம்கள் மூலம் 5   அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பலனடைந்தனர். முகாம்களுக்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மற் றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் செய்திருந்தனர்.



Tags : warming , Growing the tree can prevent global warming
× RELATED மகளிர் உரிமை தொகை தொடக்க விழாவிற்கு...