அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வேளுர் தண்டலைச்சேரியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. முதல்வர் சக்திவேல் தலைமை வகித்தார்.. இதில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக விரிவுரையாளர் திலகர் வரவேற்றார். முடிவில் விரிவுரையாளர் தனிகைராஜன் நன்றி கூறினார். திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. 


தலைமை மருத்துவர் சிவகுமார் தலைமை வகித்தார். முன்னாள் தலைமை மருத்துவர் தனபால் விஜயா முன்னிலை வகித்தார். மருந்தாளுநர் மணிவண்ணன் வரவேற்றார். சமத்துபொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

இதில் டாக்டர்கள் பாலாஜி, முகமது சுகைல், அரவிந்த்பிரசாத், அருள்குமார், சித்த மருத்துவர் அனுஷா, யோகாமருத்துவர் சுப்புலட்சுமி அலுவலக கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், தலைமை மருந்தாளுநர் கருணாநிதி, தலைமைச் செவிலியர் வாசுகி, மருந்தாளுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.Tags : Equality Pongal Festival ,Government Hospital Government Hospital , Equality Pongal Festival at Government Hospital
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை