×

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை-காரைக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்

திருவாரூர்: நாகை, காரைக்கால், திருவாரூர், பேரளம், நீடாமங்கலம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளிலிருந்து சென்னை மற்றும் வட மாநிலங்களில் பணியாற்றுபவர்கள் அதிகம் உள்ளனர். தவிர சென்னையில் இந்தப் பகுதிகளை சார்ந்த மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்கள் பொதுவாக விழாக்காலங்களில் குறிப்பாக தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ தத்தம் சொந்த ஊருக்கு வந்து செல்வது வாடிக்கை. ஆனால் இவர்களுக்கு ஏதுவாக போதுமான ரயில் சேவை இல்லை என்பது வருத்தமான ஒன்று. 


ஏறக்குறைய ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும் திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் முழுமையான ரயில் சேவையினை தென்னக ரயில்வே இன்னும் வழங்கவில்லை. இன்றைய சூழலில் பேருந்து கட்டணம் குறிப்பாக ஆம்னி பேருந்துகளின் பயணக் கட்டணம் அதிகம். ரயில் பயணத்தை விரும்புவதற்கு அதனுடைய பயண கட்டணம் குறைவு என்பது முக்கியமான ஒன்று. எனவே பொங்கல் பண்டிகையையொட்டி தென்னக ரயில்வே சென்னையில் இருந்து காரைக்குடி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுகிறோம். 


திருவாரூரிலிருந்து கேட்கீப்பர்கள் இல்லை என்று கூறி மறுக்காது ஆளில்லா லெவல் கிராசிங் போல் இயக்க வேண்டும். மேலும் இந்த கோரிக்கையினை பிற அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பொதுமக்களுடைய தேவை கருதி தென்னக ரயில்வேயிடம் கோரிக்கை வைத்தால் கூடுதல் வலு சேர்க்கும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.



Tags : Chennai ,Pongal ,Karaikudi , Special trains to Chennai-Karaikudi will be operated during Pongal
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க