×

கடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள் : 10-க்கும் மேற்பட்டோர் காயம்

ராணிபேட்டை : போகி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் கடும் புகை மூட்டம் காரணமாக ராணிப்பேட்டை அருகே அடுத்தடுத்து நேரிட்ட விபத்துகளில் 10 பேர் காயமடைந்துள்ளனர். ராணிபேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே ஏற்பட்ட விபத்தில் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக  வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கியது. இதனால் வேலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இதில் வேலூர் சிஎம்சி சிகிச்சைக்கு வந்த பங்களாதேஷ் பகுதியை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர்.  அந்த  பகுதிக்கு தற்செயலாகச் சென்ற அமைச்சர் நிலோபர் கபில் காயமடைந்தவர்களை மீட்டு 3 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ளவர்களை பங்களாதேஷ் செல்ல விமான நிலையத்திற்கு மாற்று வண்டி ஏற்பாடு செய்து கொடுத்து அனுப்பிவைத்தார்.

மேலும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றிய திமுக செயலாளர் குமார பாண்டியன் அவருடன் வந்த வெட்டுவானாம் பாபு உள்ளிட்டோர் பலத்த காயம் ஏற்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் காந்தி மருத்துவமனையிலும், விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.



Tags : Vehicles hit , heavy snowfall,10 injured
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை...