ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்களை பொய் வழக்குகள் மூலம் அடக்க முயல்கிறது: நாகை திருவள்ளுவன் பேட்டி

நாகை: ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்களை பொய் வழக்குகள் மூலம் அடக்க முயல்கிறது என திருவள்ளுவன் தெரிவித்துள்ளார். கோவை சிறையில் இருந்து ஜாமினில் வந்த நாகை திருவள்ளுவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தீண்டாமை சுவரால் ஏற்பட்ட விபத்தை சாதாரண வழக்கு போல காவல்துறை கையாள்கிறது என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சுவர் இடிந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என நாகை திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>