×

கலெக்டரிடம் பெற்றோர் மனு மகள் தற்கொலைக்கு காரணமான டிக்-டாக் செயலிக்கு தடை

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்கூட்டம் கலெக்டர் விஜய கார்த்திகேயன் தலைமையில், நேற்று நடந்தது. இதில் காங்கயம் வட்டம் நிழலி கிராமம் சக்திவிநாயகபுரத்தை சேர்ந்த  தம்பதி பங்கேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: நாங்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் 16 வயது மகள், 10ம் வகுப்பு படித்து வந்தார். 6 மாதத்துக்கு முன்பு பல்லடம் அருகே செலக்கரச்சல் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் டிக்டாக் வீடியோ மூலம், எனது மகளிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அவர் எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த நிலையில் எனது மகள் கடந்த மாதம் 19ம் தேதி, வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கோவை அரசு  மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 27ம் தேதி இறந்தார். இது குறித்து, காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வேல்முருகன் கைது செய்யப்பட்டார். எனது மகள் இறப்புக்கு காரணமாக அமைந்த டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : collector ,suicide ,daughter-in-law , Collector, parent petition, daughter suicide, tick-talk processor
× RELATED தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி...