×

மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1006 கனஅடியாக இருந்த நீர்வரத்து  நேற்று காலை 1040 கனஅடியாக அதிகரித்தது. எனினும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10,000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுவதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 112.61 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 112.03 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 81.32 டிஎம்சியாக உள்ளது. இதேபோல், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து, தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் விநாடிக்கு 2000 கனஅடியாக நீடித்தது.


Tags : Mettur Dam , Mettur Dam
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி