×

சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாட்டு பொங்கலன்று 10 கட்டணத்தில் சுற்றுலா

* எங்கும் ஏறலாம், இறங்கலாம்
* தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு:  பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ.10 கட்டணத்தில் சென்னை நகர சுற்றுலா  (எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்) மாட்டுப் பொங்கல் அன்று ஒருநாள் மட்டும் (16ம் தேதி) சிறப்பு சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. சுற்றுலா வளாகத்தில் இருந்து சுற்றுலாப் பொருட்காட்சி (தீவுத் திடல்) தொடங்கி மெரினா கடற்கரை (அண்ணா சமாதி), விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி  பேராலயம், அஷ்டலட்சுமி கோயில், அறுபடை முருகன் கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்னை திரும்பும் வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம்.

காலை 9 மணியில் இருந்து மாலை  6 மணி வரை இயக்கப்படுகிறது.  இதற்கு 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 10க்கான கட்டணம் அன்று மாலை 6 மணி வரை செல்லத்தக்கதாகும். சுற்றுலாப் பயணிகளை ஒரு இடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்திற்கு அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம். மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2, தொலைபேசி: 044-25333333, 25333444, 25333857, 25333850-54, கட்டணமில்லா தொலைபேசி: 180042531111, இணையதள முகவரி: www.tamilnadutourism.org ெதாடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  


Tags : Cow Pongal , Travel Awareness, Cow Pongal
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பார்வேட்டை உற்சவம்