×

இன்று போகிப் பண்டிகை பிளாஸ்டிக்கை எரித்தால் கடும் நடவடிக்கை: கண்காணிக்க 30 குழுக்கள்,.. 15 இடங்களில் காற்றின் தரம் ஆய்வு

சென்னை: போகிப் பண்டிகையன்று விதிகளை மீறி பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.  தமிழகத்தில் நாளை ெபாங்கல் பண்டிகை கொண்டாப்படுகிறது.இன்று  போகிப் பண்டிகை தினத்தை  ஒட்டி பிளாஸ்டிக் பொருட்களை  எரிப்பது வழக்கமாகி வருகிறது.  இந்த புகையினால், கந்தக டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு ஆகிய வாயுக்கள் வெளியாவதால், வயதானவர்கள், சிறுவர்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்படுகின்றனர். மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. போகி பண்டிகை முன்னிட்டு காற்று மாசை கண்டறிய 15 இடங்களில் ஆய்வு நடத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் ரோந்து பணியில் 30  குழுக்களும் ஈடுபடுத்தபடவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

நகர்ப்புறங்களில் டயர், டியூப், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்கள் எரிப்பதை போகிப் பண்டிகை என கொண்டாடுகிறார்கள். இதனால் வயதானவர்கள், குழந்தைகள், ேநாயாளிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி சுவாச நோய், இருமல் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படுகிறார்கள். போகியன்று கரும்புகை கலந்து பனி மூட்டத்தால், விமானங்கள் தரையிறங்குவதற்கும், புறப்படுவதற்கும், சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். இதனை மீறுபவர்கள் மீது சட்டவிதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நவீன யுகத்தில் எல்லாப் பொருட்களையும் மறு சுழற்சி செய்து வருமானம் ஈட்டும் விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் இக்கால கட்டத்தில் போகியன்று ரசாயன பொருட்களை எரித்து சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தவிர்த்து புகையில்லா போகியை கொண்டாட வேண்டும். போகி பண்டிகையன்று டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களை
எரிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது.

இதை தடுக்கும் வகையில் கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டுவாரியம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. இதனால் கடந்த ஆண்டுகளில் டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது. அதன்படி இந்த ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி கல்வித்துறையின் மூலம் புகை மாசு பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களில் பல்துறை அதிகாரிகள் அடங்கிய 30 குழுக்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை எரிப்பதை கண்காணிக்க ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். போகி பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று மாசை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகி பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளில் 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்க காற்று மாதிரியை சேகரித்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : locations ,groups ,teams , Pokப்mon festive, plastic
× RELATED சென்னை- பெங்களூரு தேசிய...