×

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பின் தூக்கு தண்டனை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

லாகூர்: பாகிஸ்தானில் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், கடந்த 2001ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் ஆட்சியை கவிழ்த்து, அதிபரானார். அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் அவர், சிறையில் அடைத்தார். மேலும், 2007ல் நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். இந்நிலையில், மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து, தனது ஆட்சியை புரட்சி மூலம் கைப்பற்றியதற்காகவும், நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்காகவும் முஷாரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தார்.

இதனால், சிகிச்சை என்ற பெயரில் 2016ல் துபாய் சென்ற முஷாரப் அதன் பின்னர் நாடு திரும்பாமல் அங்கேயே இருக்கிறார். இந்நிலையில்,  முஷாரப் மீதான வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம், கடந்த டிசம்பர் 17ம் தேதி தீர்ப்பு கூறியது. அதில், முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் முஷாரப் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் முஷாரப்பின் தூக்கு தண்டனையை ரத்து செய்தது.


Tags : Pervez Musharraf ,Pakistani ,execution ,Supreme Court , Pakistan, Former President Pervez Musharraf's execution, canceled
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு