×

பாஜ தலைவர் நட்டா அடுத்த வாரம் பதவியேற்பு

புதுடெல்லி: பாஜ.வின் புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அடுத்த வாரம் பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து கட்சியின் தலைவரான அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து கட்சிப்பணிகளில் அவருக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் கட்சியின் செயல்தலைவராக முன்னாள் அமைச்சர் ஜே.பி.நட்டாவை கடந்த ஜூலை மாதம் பாஜ தலைமை நியமித்தது.

இந்நிலையில் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது. இதில் கட்சியின் செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டா போட்டியின்றி கட்சியின் தலைவராக தேர்வாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 20ம் தேதி வெளியாகும். இதையடுத்து அவர் கட்சி தலைவராக பதவியேற்பார். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச மக்களவை தொகுதியை கைப்பற்றுவதில் கடும் சவால் நிலவியது. அப்போது நட்டாவை உத்தரப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக கட்சி தலைமை நியமித்தது. அந்த தேர்தலில் உபியில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 62 இடங்களை கைப்பற்றி பாஜ சாதனை படைத்தது. பாஜ தலைவராக பொறுப்பேற்க உள்ள நட்டா மோடியின் முந்தைய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

Tags : Natta ,BJP ,Nata , Baja leader, Natta, sworn in
× RELATED கரூரில் பா.ஜ.க. தலைவர் நட்டா...