×

உரிமையாளர், இயக்குபவர் குறித்த டிரோன் தகவல்கள் ஜன.31க்குள் பதிவு செய்து கொள்ள உத்தரவு: விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுரை

புதுடெல்லி: ஆளில்லா விமானம் வைத்திருப்பவர்கள் தங்களுடைய பெயரையும் அதனை இயக்குபவர் பெயரையும் வரும் 31ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கு விமானப் போக்குவரத்து துறை சில கட்டுப்பாடுகள், பாதுகாப்பு விதிகளை கொண்டு வந்துள்ளது. இவற்றை ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ள பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஈரானின் புரட்சிகர ராணுவ தளபதி காஸ்சிம் சுலைமானி கடந்த 3ம் தேதி, அமெரிக்க ராணுவத்தின் டிரோன் தாக்குதலில் ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விதிகளை மீறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வபோது ஆளில்லா விமானங்கள் இயக்கப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து தகவல்கள் கிடைத்து வருகின்றன. இதன் உரிமையாளர்கள், அதனை இயக்குபவர்கள் குறித்த அடையாளம் உள்ளிட்ட தகவல்களை வழங்க மத்திய அரசு ஒரு தன்னார்வ திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, டிரோன் வைத்திருக்கும் உரிமையாளர்கள், அதன் இயக்குபவர்கள் குறித்த தனிநபர் விவரங்களை தாங்களாகவே முன்வந்து ஜனவரி 31ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டு கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ministry of Aviation Owner ,owner ,operator , Owner, Director, Drone Information, Jan. 31, Registration, Ministry of Aviation, Advice
× RELATED திருச்சியில் தனியார் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்