×

இங்கிலாந்து அரச குடும்பத்தில் மோதல் இல்லை இளவரசர்கள் வில்லியம், ஹாரி முதல் முறை கூட்டாக பேட்டி: ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாக புகார்

லண்டன்: இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஹாரி தனது மனைவியும் ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கெலுடன் அரச குடும்பத்தினரின் மூத்த உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் புதன்கிழமை கூட்டாக அறிவித்தனர். அரச குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக் கசப்பால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதனிடையே ஹாரி-மேகன் தம்பதியின் முடிவு குறித்து கலந்து ஆலோசிக்க பட்டத்து ராணியான இரண்டாம் எலிசபெத் அரச குடும்பத்தினரை நேற்று நார்போல்க்கில் உள்ள சான்ட்ரிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்திருந்தார். அங்கு அரச குடும்பத்தினர் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் இளவரசர்கள் வில்லியமும், ஹாரியும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ``ஊடகங்கள் எங்களை பற்றி தவறாக செய்திகளை வெளியிடுகின்றன. அரச குடும்பத்தில் மேகனின் வரவு மூத்த இளவரசர் வில்லியமுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களிடையே பழைய உறவு இல்லை. அவர் மேகனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. வில்லியம்சின் இந்த அணுகுமுறையால் சகோதரர்களிடையே மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது என்று பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்திகள் எதிலும் உண்மை இல்லை’’ என்று கூறினர். மேலும், தனது சகோதரர் ஹாரி உடனான உறவில் விரிசல் ஏற்பட்டதை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்ட இளவரசர் வில்லியம்ஸ், `இனி நாங்கள் இணைந்து இருப்போம்’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags : Prince William ,Harry Prince William ,time ,interview ,Harry ,royal family ,UK , England, no conflict, princes William, Harry, interview, media, news, reporting
× RELATED எனக்கு புற்றுநோய் உள்ளது… வீடியோ வெளியிட்ட பிரிட்டன் இளவரசி