×

இந்தியாவுக்கு கால்நடை பாலின பிரிப்பு தொழில்நுட்பத்தை தருகிறது அமெரிக்கா: விரும்பிய கால்நடை பாலினத்தை பெற முடியும்

மதுரா: நாட்டின் கால்நடை வளத்தை பெருக்க அமெரிக்காவின் பாலின பிரிப்பு தொழில்நுட்பம் இந்தியாவில் விரைவில் அறிமுகப் படுத்தப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். கால்நடை வளத்தை அதிகரிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், பண்ணைகளில் கால்நடை வளத்தை பெருக்குவதற்கு உதவும் வகையில் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் இதுகுறித்து மத்திய கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், மத்திய அரசின் கால்நடை இனவிருத்தி திட்டத்தின் கீழ், பாலின குரோமோசோம் பிரிப்பு தொழில்நுட்பமானது கால்நடைகளின் பிரச்னைகளை சமாளிப்பதில் முக்கிய திருப்பு முனையாக அமையும். அமெரிக்காவின் பாலின பிரிப்பு தொழில்நுட்பத்தின் மூலமாக செயற்கை கருவூட்டலுக்கான செலவானது மிகவும் குறையும். முன்னதாக இதற்கான செலவானது ரூ.1200 ஆக இருந்தது. பிரத்யேக தொழில்நுட்பத்தை அமெரிக்காவிடம் இருந்து பெறுவதன் மூலமாக செலவானது மிகவும் மலிவானதாக, ரூ.100க்கு கிடைக்கும். குறிப்பிட்ட இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக 80 முதல் 90 சதவீதம் வரை விரும்பிய பாலின கால்நடையை உருவாக்கி பயன்பெற முடியும்’’ என்றார்.

Tags : India , India, Livestock and Gender Sector Industry, USA
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...