×

ஏபிவிபி போராட்டத்தால் பெரியார் பல்கலைக்கு திடீர் விடுமுறை

சேலம்: தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த நிவேதா (23), சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தாவரவியல் படித்து வந்தார். கடந்த 11ம் தேதி பல்கலைக்கழக விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டித்து ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த அமைப்பை சேர்ந்த மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த பல்கலைக்கழக நிர்வாகம், திடீரென விடுமுறை அளித்து வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது. மேலும், பொங்கல் விடுமுறை முடிந்து வரும் 20ம் தேதி பல்கலைக்கழகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், நேற்று வழக்கம் போல் வந்த மாணவர்கள், வீட்டிற்கு திரும்பி சென்றனர். மேலும், மாணவியின் தற்கொலை காரணமாக, பல்கலைக்கழகத்தில் நேற்று நடக்க இருந்த பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டது.

Tags : ABVP ,Periyar University ,holiday , ABVP struggle, Periyar University, Outbreak, Holiday
× RELATED 2 நாள் அறிவிக்கப்பட்டிருந்த கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை ரத்து