×

சித்தராமையாவின் வளர்ச்சிக்கு உதவியவர் எச்.எஸ்.மகாதேவ பிரசாத் : நினைவு நாளில் கிருஷ்ணபைரேகவுடா புகழாரம்

சாம்ராஜ்நகர்: மறைந்த முன்னாள் அமைச்சர் மகாதேவ பிரசாத் சித்தராமையாவின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தார் என முன்னாள் அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா கூறினார். சாம்ராஜ்நகரில் உள்ள அம்பேத்கர் பவனில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சர் மகாதேவ பிரசாத்  நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா கலந்துகொண்டு மகாதேவப்பாவின் உருவப்படத்தை திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசுகையில், மாநிலத்தில் பாஜ அரசு ஆட்சி பொறுப்பேற்று 6 மாதமாகிறது. 6 மாதங்கள் ஆகியும் முழுமையாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவில்லை. இந்த நிலைக்கு காரணம் பாஜவில் உள்ள குழப்ப நிலையே ஆகும். பாஜவில் அதிகமாக குளறுபடிகள் இருப்பதால் யாருக்கு அமைச்சர் பதவி அளிப்பதென தெரியாமல் பாஜவினர் திணறி வருகின்றனர். முதல்வர் எடியூரப்பா ஒருவரே பல துறைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கவனித்து வருகிறார். மாநிலத்தில் 35 அமைச்சர்கள் பதவி ஏற்கவேண்டும். ஆனால், 6 மாதங்களாக முதல்வருடன் 15 அமைச்சர்கள் மட்டுமே இருந்து ெகாண்டு ஆட்சி செய்வதால் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளனமாநிலத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையால் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது. அப்படியிருந்தும் அரசு பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் செய்வதில் தோல்வி அடைந்துவிட்டது.

விவசாயிகள் பெயரில் சத்தியம் செய்து பதவி ஏற்றுக்கொண்ட எடியூரப்பா விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார். மத்தியில் பாஜ ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஜி.எஸ்.டி. வரி, பண மதிப்பிழப்பு போன்றவற்றால் நாட்டில் நிதி நெருக்கடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி குன்றி வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. பொதுவாக மத்தியிலும், மாநிலத்திலும் பாஜ ஆட்சி பொறுப்பேற்ற பின் வளர்ச்சிப் பணிகள் என்பது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள்  அமைச்சர் மகாதேவ பிரசாத் சித்தராமையாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தார். எனவேதான் அரசியலில் சித்தராமையா அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்தார். மாநிலத்தில் எந்த பகுதியிலும் சித்தராமையாவுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை தாழ்மையுடன் சந்திப்பதுடன் சித்தராமையாவுக்கு வரும் சவால்களை மிகவும் சுலபமாக மகாதேவ பிரசாத் எதிர்கொள்வார்.
இது மட்டும் இன்றி, சித்தராமையா முதல்வராக இருந்த போது அரசின் வளர்ச்சிக்காக மகாதேவ பிரசாத் பெரிதும் உதவியாக இருந்தார். இவர் செய்த தியாகத்தை சித்தராமையா இன்றளவும் மறக்கவில்லை. மேலும், மகாதேவ பிரசாத் உதவிகளை சித்தராமையா இன்றும் நினைவு கூர்ந்து வருகிறார் என்றார்.


Tags : Magadeva Prasad ,HS Mahadeva Prasad ,Siddaramaiah ,Krishnabirekavuda ,Memorial Day , HS Mahadeva Prasad , develop Siddaramaiah
× RELATED கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம்...